பாரத சமூக பண்பாட்டில் இரண்டு விதமான சமுதாயம் ஹிந்துக்களிடத்தில் காணப்பட்டது. ஒன்று வனங்கள் மற்றும் வனத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் அடுத்து கிராமத்திலும் நகரத்திலும் வசிக்கக்கூடிய மக்கள். கிராம பிரதேசத்தை சுற்றி வசிக்கக்கூடிய மக்களும், வனவாசிகளும் மற்றும் நகரவாசிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்ந்ததுடன் ஒரு நெருக்கமான தொடர்பும் உணர்வும் கொண்டிருந்தனர். பாரத நாட்டில் வசிக்கக்கூடிய வனவாசிகளுடைய அடிப்படை மதமாக சைவ மதம் இருந்தது ஆகவே அவர் சிவனை, சிவலிங்கத்தை பூஜை செய்தனர் .வனவாசி சமூகத்தின் குல தேவதைகளான கௌரி ,சண்டி மகாலட்சுமி, ஹிந்துக்கள் வழிபடக்கூடிய தேவி களமாகவும் இருக்கின்றனர். ராவத சமுதாயத்தின் குலதெய்வமாக சண்டி தேவியை நகரத்து மக்களும் நகரத்தில் வாழக்கூடிய ஹிந்துக்களும் பூஜை செய்கிறார்கள் . ராவத சமூக மக்கள் நதிநீர் விழாவை மிக விமர்சையாக கொண்டாடி இருந்தனர்.அவ்வனவாசி சமூகத்தில் குலதெய்வமாக இருக்கக்கூடிய வாஜேத மாதாவின் முதல் ஆலயம் குஜராத்திலும் ராஜஸ்தான் பகுதியிலும் எழுப்பப்பட்டு இருக்கிறது. இந்த ஆலயம் நதிக்கரைகளில் அமைந்திருந்தது.