உலகம் முழுவதும் நமது மூவர்ணக்கொடி கம்பீரமாக ஜோலித்தது

0
264

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, நயாகரா நீர்வீழ்ச்சி, புர்ஜ் கலீபா கட்டடம், லிபர்ட்டி சிலை, ஈபிள் டவர், லண்டன் டவர் உள்ளிட்டவை , இந்திய தேசிய கொடியின் வண்ணமான மூவர்ண நிறங்களில் ஜொலித்தன.
இந்தியாவின் சுதந்திர தின பவள நாடு முழுவதும் நேற்று (ஆக.,15) சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து தங்களது நாட்டு பற்றை வெளிப்படுத்தினர்.
அதேபோல் உலகம் முழுவதும் நமது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்தன. அதன் ஒரு பகுதியாக,கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்துக்கும் ஐக்கிய அமெரிக்காவின் நியுயார்க் இடையேயான எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சி,அமெரிக்காவின் ‘தி எம்பயர் ஸ்டேட்’ கட்டடம்,சுவிட்சர்லாந்தின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான மேட்டர்ஹார்ன் மலைச் சிகரம்அமெரிக்காவின் ‘லிபர்டி’ சிலைமலேஷியாவில் உள்ள டுவின் டவர்ஸ்,இத்தாலியின் பைசா கோபுரம்நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கம் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம்இங்கிலாந்தில் உள்ள லண்டன் டவர்பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஈபிள் டவர்கோல்கட்டாவில் உள்ள ‘தி 42 டவர்’இந்தியா பெங்களூரு நகரம்மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம். ஆகியவற்றில் மூவர்ண கொடியை, ஒளி வெள்ளத்தில் ஒளிர வைத்தனர். அவை பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது

 

latest tamil news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here