1. இந்திய விடுதலைக்காக போராடிய வீரம் மிக்க புரட்சித் தளபதி
2. இயற்பெயர் ஜதீந்திர நாத் முகர்ஜி. வங்கத்தில் பிறந்த சிங்கம்
3. ஒன்பது அடி நீள வங்கப் புலி இவர் மீது பாய்ந்தது. இருபது நிமிடம் அதனுடன் போராடி சிறு கத்தியின் உதவியுடன் அதனைக் கொன்றதோடு புலி கடித்த காலை வெட்ட வேண்டும் என்று மருத்துவர் கூறியதற்கு சம்மதிக்காமல் மனோபலத்தால் குணமடைந்தார்.
4. புலியைக் கொன்றவன்’ என்ற பொருளில் பாகா ஜதீன் என்று மக்கள் இவரை அழைத்தனர்.
5. கல்லூரியில் படிக்கும் பொது சகோதரி நிவேதிதை மூலம் சுவாமி விவேகானந்தர் அறிமுகமானார். ஜதீனை மல்யுத்தம் படிக்கச் சொன்னார்.
6. 1905 வேல்ஸ் இளவரசரை வரவேற்கும் ஊர்வலத்தில் குதிரை வண்டியிலிருந்த பிரிட்டிஷார் இந்தியப் பெண்களை அவமதித்தை கண்டு வெகுண்டு அவர்களை அடித்து கீழே தள்ளினார்
7. தேவ்கர் எனும் இடத்தில் பாரீந்திர நாத் கோஷுடன் இணைந்து வெடிகுண்டு தொழிற்சாலை துவங்கினார்.
8. டார்ஜிலிங்கிற்கு ரயிலில் பயணம் செய்த போது, தன்னிடம் தகராறு செய்த நான்கு ஆங்கில கிறிஸ்தவ அதிகாரிகளை அடித்து வீழ்த்தினார்
9. இதன் காரணமாக தொடரப்பட்ட வழக்கில், ஆங்கிலேய நீதிபதி ஒரே ஓரு இந்தியன் நான்கு ஆங்கிலேயரை அடக்கினார் என்ற செய்தி வெளியே தெரியக்கூடாது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்தார்.
10. 1911 அலிப்பூர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.
11. வழக்கு விசாரணை நடக்கும் போதே பிரிட்டிஷாருக்கு எதிரான ஜுகாந்தர் எனும் ரகசிய அமைப்பின் தலைவரானார் அனுசீலன் சமிதி என்ற புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்.
12. எதிரிக்கு எதிரி நண்பன் எனும் நோக்கில் 1912 ல் ஜெர்மனியின் உதவியை நாடினார்.
13. இதனால் பிரிட்டிஷார் இவரை தேடப்படும் குற்றவாளி என அறிவித்தனர்’
14. ஓடிசாவின் பலாசூர் எனும் கிராமத்தில் பிரிட்டிஷ் போலீசுடன் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் காயமுற்றார்.
15. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாகா ஜதீன் 1915 செப்டம்பர் மாதம் பலிதானமானார்.
16. 1970ல் பாகா ஜதீன் நினைவாக அரசு தபால் தலை வெளியிட்டது