காஷ்மீரில் சட்டவிரோத பண பரிமாற்றம்; என்.ஐ.ஏ., அதிரடி சோதனை

0
113

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கின் ஷோபியான், பூஞ்ச் மற்றும் ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று(அக்.,11) தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.

பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம்,’பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணத்தேவை ஏற்பட்டது. பயங்கரவாதத்தை பரப்ப, பயங்கரவாதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் கொண்டு வரப்படுகிறது. ஆதாரங்களின்படி, கடந்த ஒரு வருடமாக இந்த முழு நெட்வொர்க்கையும் பாதுகாப்பு முகமைகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கின் ஷோபியான், பூஞ்ச் மற்றும் ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் இன்று(அக்.,11) தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here