பாரத பொருட்களுக்கு முன்னுரிமை

0
124

ஹைதராபாத்தில் நடைபெற்ற அகில இந்திய வைஷ்ய கூட்டமைப்பின் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாரதத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நாட்டின் வர்த்தகத் துறையினரை கேட்டுக்கொண்டார். இந்திய தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இதன் மூலம் வேலைவாய்ப்பு ஊக்குவிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்க்கையும் வளமாகும். நமது இளைஞர்கள் இப்போது தேவைகளுக்கான போராட்டங்களில் இருந்து விடுபட்டு, மிகுந்த லட்சியமிக்கவர்களாக உள்ளனர். புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும், தொழில் முனைவோராகவும் வளர்ச்சி அடைய அவர்கள் விரும்புகிறார்கள். பாரதத்துடன் அந்நிய வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட வளர்ந்த நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. உலகிலேயே மிக வேகமான ஒப்பந்தம் பாரதத்துக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே நடைபெற்றது. இது வெறும் 88 நாட்களில் நிறைவடைந்தது. சமூக பாகுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பிரிவினைப் போக்குகளுக்கு புதிய பாரதத்தில் இடமில்லை ” என கூறினார். மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்களது நிதி ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ஐந்து சதவீதத்தை உள்ளூர் தயாரிப்புகளுக்கு செலவிட வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை முன்வைத்த அவர், திறமைமிக்க நமது கலைஞர்கள், கைவினைஞர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு ஆதரவளித்து, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here