சிம்பெக்ஸ் 2022

0
109

இந்திய கடற்படை, 29வது இந்திய சிங்கப்பூர் கடல்சார் இருநாட்டு கூட்டு நடவடிக்கை  ‘சிம்பெக்ஸ்’ 2022’ஐ விசாகப் பட்டினத்தில் அக்டோபர் 26 முதல் 30 ஆம் தேதி வரை நடத்துகிறது. நாம் ‘சிம்பெக்ஸ்’ இம்முறை இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 26, 27ம் தேதிகளில் விசாகப்பட்டின துறைமுகப் பகுதிகளிலும், வங்காள விரிகுடா கடற்பகுதியில் அக்டோபர் 28 முதல் 30ம் தேதி வரையும் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் குடியரசின் கடற்படையைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் ஸ்டால்வார்ட் என்ற போர்க்கப்பலும், ஆர்.எஸ். எஸ் விஜிலென்ஸ் என்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கப்பலும் இந்த கூட்டு நடவடிக்கையில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளன. இந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக, சிங்கப்பூர் குடியரசு கடற்படையை சேர்ந்த கப்பற்படை அதிகாரி வைஸ் அட்மிரல் சீன் வாட் ஜியான்வென் மற்றும் இந்தியாவின் கப்பற்படை தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் பிஸ்வஜித் தாஸ்குப்தாவை சந்தித்து இருநாட்டு தொடர்பான பொதுவான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இருநாட்டு கடற்படை சார்ந்த முக்கிய முடிவுகள் தொடர்பான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here