கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

0
195

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ ) திரவ எரிபொருள் திட்ட வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின் தயார் செய்யப்பட்டும் பரிசோதிக்கப்பட்டும் வருகிறது. இந்நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எல்.வி.எம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை இந்த இஸ்ரோ மையத்தில் நடைபெற்றது. இந்த சோதனையில் இத்திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் ‘சி.இ’ 20 சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை 25 விநாடிகள் நீடித்தது. சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here