“ஒரு சேவை வரலாற்றின் கதை”-அஜித் ஜி

0
137

அஜித்ஜி- ஒரு உண்மையான கர்மவீரர்

தனது 23 ஆம் வயதில் பொறியியல் துறை பிரிவான மின்னியல் மற்றும் இயந்திரவியல் துறையில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

ஆம் இது 65 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு….

மிகச் சிறந்த திறன் வாய்ந்த அந்த இளைஞரருக்காக எதிர்காலம் காத்துக் கொண்டிருந்தது. ஆனால் உலகோரின் எண்ணத்தை விட உயர்ந்த கற்பனை அவருக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் குடிபண்டே என்ற சிற்றூரில் அரசு அதிகாரி பிரம்ம சூரையா – புட்ட தாயம்மா அவர்களின் இரண்டாவது மகன் அஜித்குமார் செய்த சாதனை சாதாரணமாக வரலாறு எழுதுபவர்களின் விழிகளில் தென்படவில்லை.

பெரிய கம்பெனிகளில் வேலைக்கு செல்வதை விடுத்து 1957 ல் தனது குடும்பத்தை விட்டு ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் பிரசாரக் ஆனார். சங்கத்தில் மிகச் சிறந்த பிரசாரகர்களில் ஒருவரான அஜித்ஜி தனது குறுகிய காலத்தில் பெங்களூர் பகுதியில் இந்துக்களுக்கு சிறந்த சேவைக்கான அடிக்கல் நாட்டியிருந்தார்.

சேவை செய்பவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களை தயார் செய்ய முடியும் என்பதுடன் பெண்கள் கூட தங்கள் வாழ்நாள் முழுவதும் சேவாவ்ருத்தியாக சமுதாய சேவை செய்ய முடியும் என்ற சிந்தனை அக்காலத்தில் சங்கத்திற்கு முற்றிலும் புதிதாக இருந்தது. ஆனால் தனது இந்த கற்பனையை சாதனைகளாக மாற்றி மனத்திண்மையுடன் இயக்கத்தின் துணையுடன் ஸ்ரீ அஜித்ஜி செய்து காட்டினார் .

1980 ல் “ஹிந்து சேவா பிரதிஷ்டான்” என்ற ஸ்தாபனத்தை நிறுவி சேவை செய்ய சுய விருப்பமுடன் முன்வந்த 23 பேர் களுக்கு முதன் முதலாக 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டன.

நேலே, அருண், சேத்தனா, பிரசன்ன கவுன்சிலிங் மையம், சேவா மித்ர, சுப்ரஜா, போன்ற மையங்கள் ஏற்படுத்தி அதன் மூலம் சேவை செய்ய பலர் ஒன்றிணைந்தனர்.

அமரர் அஜித்ஜியின் இந்த விசாலமான சிந்தனை இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது ஆரம்பம் முதல் தற்பொழுது வரை 42 வருடங்களில் நாலாயிரத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர். மட்டுமின்றி சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். சேவைக்காக அர்ப்பணித்தவர்களில் 3500 பேர் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூரில் பி இ பட்டப்படிப்பை முடித்து கம்பர் பேட் கல்யாண் சாகாவில் தனது சங்க வாழ்வை துவக்கினார் அஜித்ஜி. எந்த ஒரு விஷயத்திலும் ஒரு போதும் பின்வாங்கும் எண்ணம் அவருக்கு இல்லை.

அவரின் சங்க சிக்ஷா வாழ்வு தாமதமாகத்தான் துவங்கியது. கல்லூரியில் படிக்கும் போது முதல் வருட பயிற்சி முடித்தார். அதன் பின் அவருடைய வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும் போது அகில பாரத வித்யார்த்தி பரிஷத் மூலமாக வேலை செய்து அதன் அடிப்படையில் வாழ்வில் சொந்தங்களை இழந்த உள்ளங்களை மேன்மைப்படுத்த மிகவும் யோசனை செய்தார்.

1957-ல் சங்க பிரசாரக் ஆகவும் 1960 முதல் 1975 வரை பல்வேறு பொறுப்புகளிலும் வேலை செய்திருந்தார். எமர்ஜென்சியின் போது எல்லை தாண்டிய காரணத்திற்காக இரண்டு வருடம் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. அப்போது கூட சிறையில் உள்ளவர்களை ஒன்றிணைத்து உரிய பயிற்சி அளித்தார்.

சங்க பாடத்திட்டத்தில் யோகாவை சேர்த்ததில் பெரும் பங்கு ஸ்ரீ அஜித்ஜியே சாரும். இதற்காக அவர் புகழ்பெற்ற யோகா ஆசிரியர் பட்டாபியிடம் முறையாக யோகா பயின்றார்.

ஹிந்துக்களுக்கு சேவை செய்யும் சேவார்த்திகளுக்கு பயிற்சிக்குரிய பாடத்திட்டம் தயாரிப்பதில் ஸ்ரீ அஜித் ஜி முக்கிய பங்கு வகித்ததை அவருடன் சங்க வேலை செய்த தற்போதைய ஸர்கார்யவாஹ் ஸ்ரீ தத்தாத்ரேய ஹோஸ்பாலேஜி நினைவு கூறுகிறார். அவர் கூறும் போது “எப்போதுமே சேவை தேவைப்படுபவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். ஆனால் சேவை செய்பவர்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என அடிக்கடி அஜித்ஜி கவலைப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இயல்பாகவே சேவை செய்யும் மனப்பான்மை இருக்க வேண்டிய பெண்கள் கூட சேவையிலிருந்து விலகி இருப்பதாக வருந்தினார். அவரின் இந்த வேதனை தான் சேவார்த்திகளை உருவாக்கும் கற்பனையாக இருந்தது அதாவது சேவைக்காக சிறந்த நபர்களை உருவாக்க வேண்டும் அவர்கள் வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தை மேம்படுத்த வேண்டும் எந்த எண்ணம் சேவாத்திகளுக்கு ஏற்பட பயிற்சி அளிக்க வேண்டும். பாரதத்தின் மிக உயர்ந்த பரம்பரை, மகாபுருஷர்கள் அவதரித்த இப் புண்ணிய பூமியில் சேவையின் தேவைகள், யோகா, கட்டுப்பாடு, ஆகியவற்றுக்காக தான் இந்த 40 நாட்கள் பயிற்சி முகாம் கொடுத்திருந்தார். பயிற்சிக்குப் பின்னர் சேவார்த்திகள் தன் சுய விருப்பப்படி மூன்று ஆண்டுகள் அவர்கள் விரும்பும் பகுதியில் சேவை செய்ய வேண்டும். அவர்களுக்கு தங்க இடமும், உணவு ஏற்பாடுகளும் சிறிய அளவிலான உதவித்தொகையும் அளிக்க வேண்டும். இளைஞர்களாக இருக்கும்போது மூன்று வருடம் சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்கள் தன் வாழ்வில் அதிக நாள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என கருதினார்.”

1989 ல் பயிற்சி பெற்று வருடக்கணக்காக மகளிர் அமைப்பாளர்களாக இருந்து பின்னர் எஞ்சிய வாழ்வை சேவை செய்யும் எண்ணம் கொண்டவர்களும் மகளிரிலும் இருக்கிறார்கள் என நிரூபித்து காட்டியவர். இந்த ஸ்தாபனத்தை நிறுவிய பின் 9 வருட காலம் தான் ஸ்ரீ அஜித்ஜி உயிருடன் இருந்தார். ஆனால் அவர் ஏற்படுத்திய தாக்கம், இந்த செயல்முறை மிக பெரிய வெற்றியை அடைந்தது. பயிற்சியின் போது முழுமையாக பயிற்சி களத்தில் இருந்து பயிற்சிக்கு பங்கு கொண்டவர்களிடம் மிகுந்த ஆழமாக அன்பு ஏற்படுத்தி இருந்தார். பஸ்திகளில் யார் சிறந்த சேவை செய்வார்கள் ? அவர்களின் தகுதி என்ன? இவற்றை நன்றாக அறிந்து வைத்திருந்தார். தகுந்த சேவா விருத்திகளை நியமனம் செய்வது மட்டுமின்றி சிறந்த சேவா காரியம் நடைபெற வேண்டும் என்பதில் அவரின் உறுதியாக பங்களிப்பு இருந்தது. அவரின் இயல்பான அன்பினாலும் உயர்ந்த கருத்துக்களினாலும் அநேக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் வாழ்நாள் முழுவதும் சேவை செய்ய உறுதி பூண்டனர். சேவை செய்ய சிறந்த நபர்கள் வேண்டும் என்ற எண்ணம் ஹிந்து சேவை மையங்களில் ஏற்பட அஜித்ஜி முதன்மையாக இருந்துடன் உதவியாளர்களுக்கும் இதை உணர்த்தி இருந்தார்.

ஆனால் காலன் செய்த கொடிய செயலால் அவர் நம்மிடம் இருந்து பறித்துக் கொள்ளப்பட்டார்.

1990 டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் தனது 56 வது வயதில் பெங்களூர் சங்க கார்யாலயம் கேசவ க்ருபாவிலிருந்து தும்கூர் செல்லும் வழியில் அதிகாலை 4 மணிக்கு கார் விபத்தில் உயிரிழந்தார்.

அவருடைய சிரத்தாஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய நானாஜி தேஷ் முக் அவர்கள் பதினாறு வயதான பெண் குழந்தை தானாக சேவை செய்வதற்கு முன் வந்து விண்ணப்ப படிவத்தை நிரப்பி கொடுக்கும் இந்த செயலை வட இந்தியா முழுவதும் நம்புவதற்கு கடினமாக இருந்தது.

ஆம் எது அசம்பாவிதம் என்றிருந்ததோ அதை சம்பவமாக செய்து காட்டி வெற்றி கொடியை நிலை நாட்டினார் ஸ்ரீ அஜித்ஜி.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here