பெண் எனும் பெரும் சக்தி
வீரத்தின் விளைநிலம் பிரிட்டிஷ்
பரங்கியரின் சிம்மசொப்பனம்
இந்திய சுதந்திரத்திற்கான முதல் போரின் முக்கிய காரணி
வீரமும் விவேகமும் விளையாடிய ஜான்சி ராணி லட்சுமி பாய் …
1828 – வாரணாசியில் உதித்தது இந்த மணிக்குழந்தை மனு எனும் மணிகர்ணிகா.
அனைத்துவித போர்க்கலைகளும் கற்றாள். ஜான்சியின் மன்னர் கங்காதரராவ் – இவரது மனைவியான மணிகர்ணிகா ஜான்சியின் ராணியாக ராணி லட்சுமிபாய் என அழைக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வாரிசு இழப்பு கொள்கை மூலம், ஒரு மன்னருக்கு நேரடி வாரிசு இல்லையென்றால், அந்த அரசு தங்களுக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி ஜான்சியைத் தமது ஆட்சிக்குட்படுத்த முடிவெடுத்தது.
ராணி லட்சுமியை வெளியேறுமாறு, ஜான்சி மீது படையெடுத்தது பிரிட்டிஷ் பறங்கியர் படை.
அன்னியருக்கு அடிபணிய மறுத்த ராணி தனது படைகளுடன் பெரும் ஆற்றலுடன், வீரத்துடன், துணிச்சலுடன் போராடி வெள்ளையர்களை திக்குமுக்காடச் செய்தார்.
ஜான்சி ராணியின் சாகச போர்முறையை அருகிலிருந்து பார்த்தவன் கேப்டன் ராட்றிக் பிரிக்ஸ். ராணி தனது பற்களால் குதிரையின் கடிவாளத்தை கடித்து பற்றியவாறு இரு கைகளிலும் வாளெடுத்துப் போர்புரிந்த வீரம் அவனை மலைக்க வைத்தது.
தன் மீது வாள் வீசியவனை வெட்டிப் பிளந்து மயிர்க்கூச்செறியும் போர் புரிந்தாள் மகாராணி .
போரின் இறுதியில் எனது சடலம் ஆங்கிலேயர்களின் கையில் சிக்க கூடாது என்று உத்தரவிட்டு வீரமரணம் அடைந்தார். போர்க்களத்தின் அருகில் இருந்த கோவிலில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது
ஒன்றரை நூற்றாண்டு கடந்தும் இன்றும் நாடோடிப் பாடல்கள், கிராமிய பாடல்களால் மக்களின் மனதில் வாழ்கிறார் மணிகர்ணிகா எனும் ஜான்சி ராணி லட்சுமிபாய்.