உத்தம்சிங்

0
268

1. உத்தம்சிங் 26 டிசம்பர் 1899 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தவர்.

 

2. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான துணை ஆளுநர் மைக்கேல் ஓ டையர் என்பவரை நிகழ்ச்சி நடந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர் சுட்டுக்கொன்ற தீரர் உத்தம் சிங்.

 

3. பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உத்தம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது. 1918- ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

 

4. 1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாக பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்.

 

5. அவர் பல்வேறு பெயர்களுடன் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்தார். 1920- ல் ஆப்பிரிக்காவிற்கும் 1921- ல் நைரோபிக்கும் சென்றுவிட்டு 1924- ல் இந்தியா திரும்பினார். ஐக்கிய அமெரிக்கா சென்றார்.

 

6. சோஹன்சிங் வாக்னா, கர்த்தார்சிங் சாரபா, லாலா ஹர்தயாள், ராஷ்பிஹாரி கோஷ் போன்றோரால் உருவாக்கப்பட்ட கதர் கட்சியில் இணைந்தார். கதர் கட்சி வெளிநாடுவாழ் இந்தியர்களால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டது.

 

7. அமெரிக்காவில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் பாடுபட்டார்.

 

8. 1927- ல் பகத் சிங் அழைத்ததால் இந்தியா திரும்பினார். 1927- லேயே அனுமதியின்றி ஆயுதங்கள் வைத்திருந்ததற்காகவும் கதர் கட்சி பிரசுரங்கள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு கடுங்காவல் தண்டனை பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here