‘தமிழின் அடையாளங்களை மறைத்தால் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்’: கவர்னர் தமிழிசை

0
334

கோவை: ”தமிழுக்கென உள்ள அடையாளங்கள் மறைக்கப்படுகிறது என்றால், எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்,” என, தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை கூறினார். கோவை அவிநாசிலிங்கம் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க, தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரியில் நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் தடைபட்டிருந்தது.  மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் மகிழ்ச்சியே. மின்சாரம் தனியார்மயமாக்கலால் மக்களுக்கு நன்மையே கிடைத்துள்ளது. ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தஞ்சாவூரில் நான் படிக்கும்போது ராஜராஜசோழனின் திலகமிட்ட முகத்தை பார்த்து பிரமித்துள்ளேன். நெடுங்காலமாக தமிழகத்தின் கலாசாரத்தின் அடையாளங்களை மறைக்கப்பார்க்கின்றனர். அது இனி முடியாது. தமிழுக்கு என்றுள்ள அடையாளத்தை மறைத்தால் எதிர்த்து எல்லோரும் குரல் கொடுப்போம். ஹிந்து என்பது கலாசாரத்தின் அடையாளம். எதை வேண்டுமானாலும் உங்களுக்கு ஏற்றவாறு திருப்பிக்கொள்வதை ஒப்புக் கொள்ள முடியாது.

Thanjavur - World History EncyclopediaStatue of King Rajaraja Chola Stock Photo | Adobe Stock
தமிழனின் அடையாளம் இறைவழிபாடு. இறைவழிபாடோடு மக்கள் வாழ்க்கை அப்போது இருந்தது. இனிமேலும் அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அது சரியாக இருக்காது.
இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here