உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் உள்ளது. அங்கு புனித நீராடும் ஒரு மாத கால ‘மகா மேளா’ தற்போது துவங்கியுள்ளது. இதனையடுத்து அங்கு மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு, முதல் நாளில் இருந்தே புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள்புனித நீராடலுக்காக அனுமதிக்கப்பட்டனர். இதற்காக, திரிவேணி சங்கமத்தில், புனித நீராட 14 படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் புனித நீராடியதுடன் சடங்குகள் செய்தும் வழிபட்டனர். மகா மேளாவையொட்டி, 500 படுக்கைகள் கொண்ட தங்குமிடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் காவல்துறையின் நீச்சல் வீரர்கள் படகுகளில் ரோந்து சுற்றுதல் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.