ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை வாரம்

0
176
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையும் (டி.பி.ஐ.ஐ.டி), வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமும் இணைந்து, இந்திய ஸ்டார்ட்அப் சூழல் மற்றும் தேசிய ஸ்டார்ட்அப் தினத்தை (ஜனவரி 16, 2023) கொண்டாடுவதற்காக வரும் 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை வாரத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது. ஸ்டார்ட்அப் இந்தியா புதுமை வாரம் 2023 கொண்டாட்டத்தில், கொண்டாட்டத்தில், தொழில்முனைவோர், தொழில்முனைவராகும் ஆர்வமுள்ளோருக்கான கருத்தரங்குகளோடு, இது ஸ்டார்ட்அப் சூழலில் தொடர்புடைய அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களும் பங்கு பெறுவர். மேலும், ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் 75க்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்டார்ட்அப் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நாடு முழுவதும் உள்ள தொழில்முனைவோர் மற்றும் கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படவுள்ளன. இந்த நிகழ்வுகளில் பெண் தொழில்முனைவோருக்கான பிரத்யேக பயிற்சிப் பட்டறைகள், வழிகாட்டும் பயிற்சிகள், வட்ட மேசை மாநாடுகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிக் பட்டறைகள் போன்றவை அடங்கும். மேலும், ஜனவரி 16, 2023 அன்று தேசிய ஸ்டார்ட்அப் தினத்தை நினைவுகூரும் வகையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சிறந்து விளங்கியோருக்கு தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் 2022 பாராட்டு விழாவை டி.பி.ஐ.ஐ.டி ஏற்பாடு செய்கிறது. இந்த விழாவில், பல்வேறு துறைகள், ஸ்டார்ட்அப்களில் சிறந்து விளங்குவோரை அங்கீகரித்து வெகுமதி அளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here