ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டம்

0
165

ஜி20 பாரதத்தின் தலைமைத்துவத்தின் கீழ், முதலாவது ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று முதல் 20 வரை நடைபெறுகிறது. ஜி20 பாரதத்தின் தலைமைத்துவத்தின் சுகாதார அமைப்பு, நான்கு சுகாதார பணிக்குழுக் கூட்டங்கள், சுகாதார அமைச்சர்கள் நிலையிலான ஒரு கூட்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டங்கள், திருவனந்தபுரம் (கேரளா), கோவா, ஹைதராபாத் (தெலங்கானா), காந்திநகர் (குஜராத்) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளன. மருத்துவ பயணம் மற்றும் டிஜிட்டல் சுகாதாரம்; மருந்துகளின் கூட்டு ஆராய்ச்சி குறித்த பயிலரங்கு, நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பூசிகள், பாரம்பரிய மருத்துவத்திற்கான சர்வதேச மையம் ஆகியவை குறித்து விவாதிக்க பாரதம் திட்டமிட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள இந்த உள்ள இந்த முதலாவது சுகாதாரப் பணிக்குழுக் கூட்டத்திற்கு இடையே மருத்துவப் பயணம் குறித்த கூட்டமும் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here