பரிக்ஷா பே சர்ச்சாவில் கலந்துகொள்வோம்

0
146

தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து மாணவர்களுக்கு பிரதமர் மோடி ஆலோசனை வழங்கும் பரிக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். உலகின்மிகப்பெரிய தேர்வு திருவிழாவான ‘தேர்வும் தெளிவும் – பரீட்சையை பற்றி விவாதிப்போம்’ நிகழ்ச்சி நாளை காலை 11 மணி அளவில் டெல்லி தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள 150க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 50 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன், மைகவ் இந்தியா யூடியூப் சேனல் போன்றவற்றில் நேரலையிலும் ஒளிபரப்பாக உள்ளது. அவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார். இதற்காக, innovateindia.mygov.in என்ற இணையதளம், Namo செயலி போன்றவை மூலமாக, தேர்வு தொடர்பான தங்களது ஆலோசனை, அனுபவம், கருத்து போன்றவற்றை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பிரதமருக்கு ஏற்கனவே அனுப்பியுள்ளனர். மேலும், தேர்வு குறித்து அவர்கள் தங்கள் கருத்துகளை தங்களது சொந்த குரலிலேயே பதிவு செய்ய 1921’ எனும் தொடர்பு எண்ணையும் மத்திய கல்வி அமைச்சகம் வழங்கியுள்ளது. இதைத்தவிர பல்வேறு மத்திய அமைச்சர்களும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு மாநிலங்களுக்கு சென்று மாணவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளனர். அவ்வகையில், மாணவர்களுக்கு பிரதமர்ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் தமிழகத்துக்கும் வர உள்ளனர். அவர்கள் தனிப்பட்ட முறையில் தேர்வு குறித்த தங்களது அனுபவங்கள், ஆலோசனைகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here