பொருளாதாரத்தை மேம்படுத்த ‘ஜி – 20’ நாடுகள் ஒன்றுபடவேண்டும்

0
167

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஜி – 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாடு நடந்தது. இந்தோனேஷியா தலைமையில் நடந்த இம்மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், பொருட்கள் வினியோகத்தில் இடர்பாடு, எரிசக்தி சந்தையில் அதிக ஏற்ற, இறக்கம், முதலீடுகளில் நிச்சயமற்ற சூழல் போன்றவற்றால் ஜி – 20 உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் தேக்கம் அடைந்துள்ளது.எனினும், சர்வதேச கொள்கைகளைப் பின்பற்றி இடர்பாடுகளை சமாளித்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் திறன் ஜி – 20 அமைப்புக்கு உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டெழுந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.என்று பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here