பாதுகாப்பு அறைகளை கட்டுங்கள்

0
181

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உலக சிவனடியார்களுக்கு சங்க அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில், சிலைகள் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அறைகள் கட்ட தமிழக அரசு ரூ. 340 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், ஒரே ஒரு கோயிலில் மட்டும் சிலை பாதுகாப்பு அறை கட்டப்பட்டுள்ளது. அதுவும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில், பாதுகாப்பு அறைகள்இன்னமும் கட்டப்படவில்லை. கோயில்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நகைகள் உள்ளன. அதன் விபரங்களை, தமிழக அரசு அறிக்கையாக வெளியிட வேண்டும். கோயில்களிலிருந்து கடத்தப்பட்டு, மீட்கப்பட்ட சிலைகளை, மீண்டும் அந்தந்த கோயில்களிலேயே வைக்கவும் பக்தர்கள் வழிபடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here