கூகுள் ட்ரெண்ட்சில் காஷ்மீர் தேடல்

0
467

காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பொதுமக்களிடம் பெரிய அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இத்திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பிருந்தே அதிகமான பொதுமக்கள், காஷ்மீரி ஹிந்து மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை, காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றி மேலும் விவரங்கள் அறிய இணையத்தில் தேடியுள்ளனர் என கூகுள் ட்ரெண்ட்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 30 நாட்களாக, காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் அவர்களின் கொடூரமான கொலைகள் பற்றிய தகவல்களைத் அதிகமான மக்கள் இணையத்தில் தேடியுள்ளனர். அதில் ‘காஷ்மீரி பண்டிட்’, ‘காஷ்மீரி ஹிந்துக்கள்’, ‘காஷ்மீரி பண்டிட் இனப்படுகொலை’ போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இத்தேடல்கள் கடந்த மார்ச் 15 அன்று 100 என்ற உச்சகட்ட மதிப்பை எட்டியது. இது மட்டுமல்லாமல், காஷ்மீரி பண்டிட்டுகளில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த குறிப்பிட்ட தகவல்களையும் அவர்கள் தேடியுள்ளனர். குறிப்பாக, கிரிஜா டிக்கோ, பி.கே.கஞ்சூ போன்ற இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைக் கதைகளை மக்கள் தேடி அறிந்துகொண்டுள்ளனர். சுவாரசியமாக, இந்த வன்முறையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளான யாசின் மாலிக், பிட்டா கராத்தே என்ற பரூக் அகமது தார் போன்றவர்களையும் பாரதத்தில் இருந்து காஷ்மீரை பிரிக்க எண்ணும் தீவிர இடதுசாரி பிரிவினைவாதிகளான அருந்ததி ராய், நிவேதிதா மேனன் போன்றோரையும் மக்கள் அதிகம் தேடிப்படித்து அவர்களின் உண்மை முகத்தை அறிந்துகொண்டுள்ளனர். அவ்வகையில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ உண்மையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு திருப்புமுனை திரைப்படம் என்பது நிதர்சனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here