செக்மேட் செய்ய பாரதத்திற்கு அழைப்பு

0
88

பாரதத்தில் ஏரோ இந்தியா 2023 சர்வதேச விமானக் கண்காட்சி பிப்ரவரி 13 முதல் 17ம் தேதிவரை பெங்களூருவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த ஏரோ இந்தியா கண்காட்சியில் கலந்து கொள்ளும் ரஷ்ய பிரதிநிதிகள், ஐந்தாம் தலைமுறை விமானங்களை, குறிப்பாக செக்மேட் ரக அதிநவீன ஐந்தாம் தலைமுறை விமானத் தயாரிப்பில் பாரதத்துடனான சாத்தியமான ஒத்துழைப்பைப் பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளனர். செக்மேட் என்பது லகுரக ஐந்தாம் தலைமுறை போர் விமானமாகும். புதிய ஒற்றை எஞ்சின் போர் விமானமான இது ராடாரால் கண்டுபிடிக்க முடியாத வகையிலான ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. ஏழு டன்களுக்கு மேல் ஆயுதங்கள் சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேலும் ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இது மாக் 1.8 (ஒலியின் வேகத்தை விட 1.8 மடங்கு) வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது, 3,000 கி.மீ தூரம் வரை நிற்காமல் பறக்கத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here