விண்ணில் பாயும் எஸ்.எஸ்.எல்.வி டி 2

0
51

500 கிலோ வரையிலான, எடை குறைந்த செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதைக்கு கொண்டுச்செல்ல, செலவு குறைந்த சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை இஸ்ரோ புதிதாக வடிவமைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி, சிறிய ரக 2 செயற்கைக்கோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி டி 1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், ராக்கெட்டின் சென்சார் செயலிழந்த காரணத்தால் அது தவறான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியது. இதனால் அப்போது இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, இதே வகையிலான புதிய ராக்கெட் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது எஸ்.எஸ்.எல்.வி டி 2 ராக்கெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த ராக்கெட்டில் புவி கண்காணிப்பு மற்றும் எதிர்காலத் தேவைக்கான ஆய்வுப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இ.ஒ.எஸ் 07 செயற்கைக்கோள், அமெரிக்காவின் `ஜானஸ்’ செயற்கைகோள், பாரதத்தின் ஸ்பேஸ் கிட்ஸ் நிறுவனத்தின் மூலம் 750 பள்ளி மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட `ஆசாதிசாட் 2′ ஆகிய 2 சிறிய செயற்கைக்கோள் என 3 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு இன்று காலை 9.18 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here