பாரதத்தில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கியு. ஆர்.எஸ்.ஏ.எம் (QRSAM) ஏவுகணையில் உள்ள சில சிறிய குறைபாடுகள் ராணுவத்தால் கண்டறியப்பட்டு அவை அதனை தயாரித்த பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிடம் (டி.ஆர்.டி.ஓ) தெரிவிக்கப்பட்டன. அந்த குறைபாடுகளை டி.ஆர்.டி.ஓ தற்போது சரிசெய்துள்ளது. இதனையடுத்து இந்த ஏவுகணைகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் சோதிக்கப்பட உள்ளன என டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது. இது, கடைசியாக செப்டம்பர் 2022ல் சோதிக்கப்பட்டது. கியு.ஆர்.எஸ்.ஏ.எம் ஏவுகணைகள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை அதிகபட்சமாக 30 கி.மீ தூரத்தில் சுட்டு வீழ்த்துவதற்கான விரைவான எதிர்வினை ஏவுகணையாகும். இது, இந்திய ராணுவத்தின் தாக்குதல் அமைப்புகளுக்கு வான்வழி பாதுகாப்பு வழங்கவும் எதிரி பிரதேசத்தில் ஆழமான தாக்குதல் வழங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.