MDB கோவில்களுக்கான அறங்காவலர்களாக இனி கட்சி ஆட்கள் கூடாது -கேரள உயர்நீதிமன்றம்

0
119

மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கீழ் உள்ள கோவில்களுக்கு, பரம்பரை அல்லாத அறங்காவலர்களாக எந்த கட்சிக்காரரையும் நியமிக்கக் கூடாது என, மலபார் தேவசம் போர்டுக்கு (எம்டிபி) கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பூக்கோட்டு, ஒட்டப்பாலம் பூக்கோட்டு கலைக்காவு கோவிலில் சிபிஎம் உள்ளூர் கமிட்டி (எல்சி) செயலாளர், கிளை செயலாளர் மற்றும் DYFI மண்டல செயலாளர் ஆகியோர் சட்டவிரோதமாக MDB ஆல், அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்து ஐக்கியவேதி மாவட்டத் தலைவர் இது தொடர்பாக பி.என். ஸ்ரீராமன், அனந்தநாராயணன் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, இந்த உத்தரவிற்கு எதிராக நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள், ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் அல்லது DB அவர்களை வெளியேற்ற வேண்டும். இனிமேல் பக்தர்களில் இருந்து அறங்காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here