அம்ரித்பால் சிங்கின் பணப் பரிவர்த்தனை

0
171

இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, தப்பியோடிய காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் தலைமையிலான காலிஸ்தானி சார்பு அமைப்பான ‘வாரிஸ் பஞ்சாப் டி’யின் ஐந்து உறுப்பினர்களின் பல வங்கிக் கணக்குகளில், கடந்த ஏழு ஆண்டுகளில், 40 கோடி ரூபாய்க்கு மேல் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. டெல்லியின் எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது உயிரிழந்த சிலரின் குடும்பங்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் ஒரு சில வழக்குகளில் பணம் பெறப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில், மத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பெயரில் பணம் பெறப்பட்டதும் கண்டறியப்பட்டு உள்ளது. “அவர் வீராவேசமாகப் பேசுவதும் காவல்துறைக்குகு சவால் விடும் பேச்சுகளும் இருந்ததால், அவர் இப்படி கோழைத்தனமாக ஓடுவார் என, நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. கைது செய்யப்படுவதை அறிந்ததும், அவர் சரணடைவார் என நினைத்தோம்” என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார். தப்பியோடிய 30 வயதான தல்ஜீத் சிங் கல்சியின் நெருங்கிய கூட்டாளி ரூ. 35 கோடிக்கு மேல் பெற்றுள்ளார். பிரிவினைவாத குழுவிற்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக பஞ்சாப் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தல்ஜீத் சிங் கல்சி இயக்குநராகப் பணியாற்றிய ஐந்து நிறுவனங்களில் மூன்றின் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ள இந்த வங்கி பரிவர்த்தனைகள் வழக்குகள், பல ஆண்டுகளாக நீடிக்கும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கல்சியைத் தவிர, ‘வாரிஸ் பஞ்சாப் டி’ மோகா மாவட்டத் தலைவர் குர்மீத் சிங் புக்கன்வாலா, பர்னாலா மாவட்டத் தலைவர் சுக்செயின் சிங் தலிவால், தர்ன் தரன் மாவட்டத் தலைவர் குர்ப்ரீத் சிங் மற்றும் சங்ரூர், மாவட்ட தலைவர் அவதார் சிங் அவுலாக் ஆகியோரும் விசாரணை முகமைகளின் கண்காணிப்பில் உள்ளனர். IMPS (உடனடி கட்டணச் சேவை), UPI (யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்), அத்துடன் பண வைப்புத்தொகை போன்றவை, இந்த சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனைகளின் போது பெரும்பாலான பணத்தை அனுப்ப பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணத்தில் கணிசமான தொகை, (சுமார் ரூ. 5 கோடி) ஏ.டி.எம்களில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த பரிவர்த்தனைகள் 12 வெவ்வேறு நாடுகளில் செயல்படுத்தப்பட்டன என் தெரிய வந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here