ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வரம்கரில் ஹிந்து புத்தாண்டை முன்னிட்டு ஹிந்துக்கள் நடத்திய பேரணி மீது முஸ்லிம் கும்பல் கல்வீசி தாக்குதல் நடத்தியது. பேரணியின் பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டாலும் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் கூடுதல் படையினர் வந்து வன்முறை கும்பல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த பேரணி ‘ஹிந்து ரன்பேரி பேரணி’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து புத்தாண்டின் போது நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வகையில், ஜாம்வரம்கரின் ரைசர் பகுதியில் உள்ள தலா கிராமத்தில் ஹிந்துக்கள் நடத்திய இருசக்கர வாகன பேரணி, காலை 10.15 மணியளவில் கேல் மைதான் சந்த்வாஜியில் இருந்து தொடங்கியது. பேரணியின் திட்டமிட்ட பாதையின்படி, சந்த்வாஜி, பில்வா, சந்தவாஸ், தலா கிராமம், ராஜ்புரா, தோடா வழியாக தோடேஷ்வர் மகாதேவ் கோயிலில் முடியும். சுமார் 1,000 இரு சக்கர வாகனங்கள் அடங்கிய பேரணிக்கு சுமார் 50 காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வரம்கரில் இந்த பேரணி சென்றபோது, பேரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பேரணியில் வந்தவர்கள் மீது தலையில் குல்லாய் அணிந்த முஸ்லிம் கும்பல் ஒன்று கற்களை கொண்டு கொடூரத் தாக்குதல் நடத்தியது. எனினும், தாக்குதலையும் மீறி பேரணி முன்னேறியது. ஆனால் அங்கு ஏற்பட்ட பதற்றத்தால் சிலர் பின்தங்கிவிட்டனர். அந்த மர்ம கும்பல், பிந்தங்கிய அப்பாவிகள் மீது கற்களை வீசிதாக்கியது. இதனால், அவர்கள் தப்பி ஓட வேண்டியிருந்தது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில், இத்தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்களில் பலர் தலையில் குல்லாய் அணிந்திருந்ததைக் காணலாம். சில மைனர் சிறுவர்களும் இதில் கற்களை வீசுவதையும் காணலாம். அந்த வீடியோவை பகிர்ந்துகொண்டு இதுகுறித்து டுவிட்டரில் கருத்துத் தெரிவித்த பா.ஜ.க எம்பி ராஜ்யவர்தன் ரத்தோர், ஜாம்வரம்கரில் இந்த பேரணி சென்றபோது, அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ராஜஸ்தானில் இஸ்லாமியவாத மனப்பான்மை அதிகரித்து வருகிறது. ராஜஸ்தானில் தற்போது நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) பயங்கரவாத மனநிலை வளர்ந்துள்ளது. ஹிந்து சமூகத்தின் மீது கல் வீசுபவர்கள் மீதும், வன்முறையில் ஈடுபடுவோர் மீதும் காங்கிரஸ் அரசு மெத்தனம் காட்டுகிறது. இந்த சமாதானத்தின் விளைவுதான் இந்த சம்பவங்கள். இதுபோன்ற மதரசாக்கள் மற்றும் தவறான செயல்களுக்கு எதிராக அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குற்றம்சாட்டினார்.
இச்சம்பவத்தை அடுத்து காவல்துறையினர் நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளனர், இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜெய்ப்பூர் கிராமப்புற காவல்துறை ஒரு டுவீட்டில், வெளியான வீடியோ ஆதாரங்களை வைத்து இதில் ஈடுபட்ட மேலும் பலரை அடையாளம் காண முயற்சிப்பதாகக் கூறியுள்ளது. மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பவர்கள் மற்றும் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பேரணியின் ஒரு பகுதியாக இருந்த ஒரு நேரில் கண்ட சாட்சி கூறுகையில், “பேரணியில் இருந்த காவலர்களும் பொதுமக்களும் தாக்குதல் நடத்தியவர்களை கல்லெறிவதைத் தடுக்க முயன்றபோது அவர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர். தாக்குதல் நடந்த போதிலும், பேரணியில் பங்கேற்றவர்கள் எதிர்வினையாற்றாமல் அமைதியாக முன்னேறினர்” என்று கூறினார்.