மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து
உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். இத்தகைய உதாரண
புருஷரான ஸ்ரீ ராமர் அவதாரம் எடுத்த நாளையே ராம நவமியாக இந்துக்கள்
உலகெங்கும் வழிபடுகின்றனர். அவரவர் சவுகரிஅப்படியும்,
இடத்துக்கேற்றபடியும், ஸ்ரீ ராமனின் ஜென்மத்தினத்தை ஒன்பதுனாட்கள், பத்து
நாட்கள் என்றெல்லாம் மக்கள் உலகெங்கும் வருட வருடம் கொண்டாடி
வருகின்றனர். இந்தப் புண்ணிய நாளில் ஸ்ரீ ராமர் பிறந்த அயோத்யாபூமி, மற்றும்
ராமேஸ்வரம், பாடறச்சலாம், ஷீர்டி, சீதாதேவி பிறந்ததளமாகக் கருதப்படும்
பீகாரில் உள்ள சீதாமர்ஹி போன்ற பல இடங்களில் ஸ்ரீ ராம பஜனை, சீதா
கல்யாண மகா உற்சவ விழா அரங்கேறி வருகின்றன. ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம்
உள்ளிட்ட தென் பகுதி ஷேத்திரங்க ளிலும் பற்பல உற்சவங்களோடு ராமநவமி
சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம்
மேற்கொள்வர். தக்ஷிண அயோத்யா என பக்தியுடன் அழைக்கப்படும்
ஆந்திராவிலுள்ள பத்ராசலம் கோவிலில் ஒன்பது நாள் விழா பக்தி
அதிர்வலைகள் விழா முடிந்தபின்னும் பல நாட்களுக்கு நீடிக்கும். பதினேழாம்
நூற்றாண்டில் பக்த ராமதாசரால் கட்டப்பட்டது பத்ராசலம் ஆலயம். . இறுதி
நாளான ஒன்பதாம் நாள் சீதாராம கல்யாணம் என்று சீதா ராமர்களின் திருமண
நாளாகக் கொண்டாடுகிறார்கள்.
பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில், கிருஷ்ணபட்ச நவமி திதியில் தான் ஸ்ரீ
ராம அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்த விழா
கொண்டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது
மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது ஸ்ரீராம ஜெயம் என்று 108
முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், என உச்சரிக்க நம்
உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப் படுவதாகவும்
ஐதீகம்.