திருச்சி மாவட்டத்திலுள்ள தொட்டியம் ஊரில் அமைந்துள்ளது தான் மதுரகாளியம்மன் கோயில். மதுரை வீரன் சந்நிதியும் இத்தலத்தில் அமைந்துள்ளது.இந்நிலையில் மதுரகாளியம்மனுக்கு நடைபெறும் திருவிழாவும், தேரோட்டமும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். தை மாதம் இரண்டாம் தேதி முகூர்த்த கால் நடப்பட்டு திருவிழா ஏற்பாடுகள் தொடங்கி, பங்குனி மாதம் தேரோட்டம் முடியும் வரை தொட்டியம் பகுதி முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த விழாவின் முக்கியமான கொண்டாடப்படும் இரட்டைத் தேரோட்டம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கும் 32 அடி உயரம் கொண்ட பெரிய தேர், 30 அடி உயரம் கொண்ட சிறிய தேர், இரண்டும சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வீதியுலா வரும். “தமிழகத்திலேயே தோளால் தூக்கிச் செல்லப்படும் மிக உயரமான தேர் “இதுவாகத் தான் இருக்கும். இரண்டு தேரும் ஒரே நேரத்தில் வீதிவலம் வருவதால், சுமார் 200பேர் தேரைச் சுமந்து சென்று அம்மன் திருவீதி உலா வந்து சிறப்பாக நடைபெற்றது. 18 பட்டி கிராம மக்கள் திருவிழாவில் ஒன்று கூடுவார்கள். சிறிய தேரில் மதுர காளி அம்மனும், பெரிய தேரில் ஓலைப்பிடாரிகளும் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தார் இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.