தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லுாரியின் முன்னாள் மாணவரான, சந்தீப் சிங், 1983, டிச.,22ம் தேதி போர் விமானியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, மாஸ்கோவில் உள்ள ‛சு-கோய்-30′ திட்டக்குழுவின் சோதனை விமானி, விமானப்படையின் தென்- மேற்கு பிராந்திய தலைமை தளபதியா உட்பட பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர், வரும் (ஏப்.,24)ம் தேதி பதவியேற்க உள்ளார். சுகோய்-30, மிக்-29,மிக்-21, கிரண், ஏ.என்-32, ஜாகுவார், மிரேஜ் – 2000 ஆகிய போர் விமானங்களில், 4,900 மணிநேரம் பறந்துள்ளார். விமானப்படை தளபதியாக இருந்து, இந்தாண்டு ஜன.,31ம் தேதி ஓய்வு பெற்றிருந்த இவர், ராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக, தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். சந்தீப் சிங், வரும் ஏப்.,24ம் தேதி பதவியேற்க உள்ளார்.