சென்னையில் ராஜ்பவனில், பிரதமரின், ‘மனதின் குரல்’ 100வது நிகழ்ச்சியின் தமிழ் திரையிடல் நிகழ்ச்சி, கவர்னர் ரவி தலைமையில் நடந்தது. பத்திரிகை தகவல் மைய கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை வரவேற்றார். மனதின் குரல் நிகழ்ச்சியில் இடம் பெற்ற தமிழக சாதனையாளர்களுக்கு, பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கி, கவர்னர் ரவி பாராட்டினார். பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின், 100வது அத்தியாயம் இது. இந்த நிகழ்ச்சி எப்படி மாறியுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.இன்றைய சூழலில், எதைச் செய்தாலும் அது அரசியலாக பார்க்கப்படுகிறது. ஆனால், நுாறு அத்தியாயத்தை கடந்த போதும், மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் ஒரு போதும் அரசியல் பேசியதில்லை. அவர், மக்களுடன் இணைந்து இருப்பதோடு, சாமானியர்கள், அறியப்படாத மக்கள், அவர்கள் சாதித்த மகத்துவமான பல செயல்பாடுகள் சார்ந்த விஷயங்கள் குறித்து பேசி உள்ளார்.நுாறாவது நிகழ்ச்சியிலும், அதிக முறை தமிழகம் குறித்து பிரதமர் பேசியுள்ளார்.உலகில் அதிக மக்களால் கேட்கப்படும் ஒரே நிகழ்ச்சி மனதின் குரல். இவ்வாறு கவர்னர் பேசினார்.