நீண்ட காலமாக, வரலாற்றாசிரியர்கள் மற்றும் பள்ளி வரலாற்று பாடப்புத்தகங்கள் எல்லாம் முஸ்லிம் கொடுங்கோலன் திப்பு சுல்தானை ‘சுதந்திர போராட்ட வீரர்’ என்று அழைத்தன. திப்பு சுல்தானின் பிறந்தநாள் காங்கிரஸ் கட்சித் தலைமையிலான அரசால் நினைவுகூரப்பட்டது. ஹிந்துக்களை படுகொலை செய்ததிலும், கோயில்களை இடிப்பதிலும் பெயர் பெற்றவர் திப்பு. மத வெறி மற்றும் பயங்கரவாதம் நிறைந்த 18ம் நூற்றாண்டின் மைசூர் சுல்தானின் உண்மையான பிரதிநிதித்துவம் பற்றிய ஒரு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இந்தப் படத்தை ‘ஈரோஸ் இன்டர்நேஷனல்’ நிறுவனம் வழங்குகிறது.
வரவிருக்கும் “திப்பு” திரைப்படத்தின் அறிவிப்பு வீடியோவில், திப்பு சுல்தான் 8,000 கோயில்கள் மற்றும் 27 சர்ச்சுகளை அழித்தது, 4 மில்லியன் ஹிந்துக்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றியது மற்றும் மாட்டிறைச்சி உண்ண அவர்களை கட்டாயப்படுத்தியது, ஒரு லட்சம் ஹிந்துக்களை சிறையில் அடைத்தது, கோழிக்கோட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிராமண குடும்பங்களை அழித்தது, 1783ம் ஆண்டு அவரது போர் முழக்கம் ‘ஜிஹாத்’ தொடங்கியது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 50 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ பின்னணியில் எரியும் கோயில்கள் மற்றும் முன்புறத்தில் திப்பு சுல்தானின் உருவப்படத்துடன் அவரது முகத்தில் கறை படிவதாக முடிவடைகிறது.
“திப்பு” படத்தை ராஷ்மி ஷர்மா இணைந்து தயாரித்துள்ளார் மற்றும் சந்தீப் பவன் சர்மா இயக்கியுள்ளார். சந்தீப் ஷர்மா, சுதந்திரப் போராட்ட வீரரான வீர் சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை “சுதந்திரிய வீர் சாவர்க்கர்” என்ற தலைப்பில் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சந்தீப் சர்மா, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான “அடல்” திரைப்படத்தையும் இயக்கியவர். இந்த ‘திப்பு’ திடைப்படம் ஹிந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. ஹார்வர்ட் மற்றும் ஐ.ஐ.டி காரக்பூரில் படித்த அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ரஜத் சேதி இந்த படத்திற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.