தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு நபர் ஹிந்து தெய்வங்களான ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஹனுமன் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையிலும் அந்தணர்களை இழிவுபடுத்தும் நோக்கிலும் கவிதை வாசிக்கிறார். அதோடு, சீதா பிராட்டியை களங்கப்படுத்தும் வகையில், இலங்கைக்கு சென்றுவிட்டதாக கூறி தனது ஹிந்து மதத்தின் மீதான வன்மத்தை, வெறுப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சமூக நீதி என கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றிவரும் தி.மு.க அரசோ அதன் ஏவல்துறையோ இப்படியொரு மோசமான கவிதையை வாசித்த நபரை இதுவரை கைது செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ‘இதே முகமது நபி பற்றியோ அல்லது ஏசு குறித்தோ அவர் கவிதை பாடியிருந்தால் இந்த அரசு இதுவரை சும்மா இருக்குமா? அல்லது கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் என தி.மு.க குடும்பத்தினர் பற்றி பாடியிருந்தாலும் கூட அவரை விட்டு வைத்திருக்குமா? அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தி.மு.க. ஹிந்து விரோத அரசுதான் என்பதை தொடர்ந்து நிருபித்து வருகிறது’ என மக்கள் சமூக ஊடகங்களில் சாடி வருகின்றனர். ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும் அந்த நபரை கைது செய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர்.