கலாஷேத்ரா மாணவியர் பதிலால் திடீர் திருப்பம்

0
166

சென்னை, திருவான்மியூரில், மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணி நுண்கலை கல்லுாரி உள்ளது. இங்குள்ள விடுதியில் தங்கி, 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பரதம், இசை உள்ளிட்ட கலைகளை பயில்கின்றனர். அங்கு பணிபுரிந்த, உதவி பேராசியர் ஹரிபத்மன் மற்றும் சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன் ஆகியோர், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இந்த பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து, அடையாறு மகளிர் போலீசார், 162 மாண – மாணவியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் பலர், ‘கல்லுாரியில் பாலியல் தொல்லை இல்லை. எங்கள் பேராசிரியர்கள் அன்பானவர்கள், மதிப்புக்குரியவர்கள்’ என, போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், பாலியல் தொல்லை வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here