1. 25.05.1886-ல் மேற்கு வங்காளம், பர்த்வான் மாவட்டத்தில் பிறந்தார்.
2. சந்தன் நகரில் தனது கல்வியை முடித்த ராஷ், இளமையிலேயே புரட்சி இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
3. குதிராம் போஸ் என்ற புரட்சியாளர் நடத்திய குண்டுவீச்சால் கிங்க்ஸ்போர்ட் என்ற ஆங்கிலேய அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, அலிப்பூர் சதி வழக்கு (1908) தொடரப்பட்டது.
4. அரவிந்தர் கைது செய்யப்பட்டார். ராஷ் பிகாரி போசும் அந்த வழக்கில் தேடப்பட்டார். அதிலிருந்து தப்ப வங்கத்தை விட்டு வெளியேறிய ராஷ், டேராடூனில் வனவியல் ஆய்வு மையத்தில் தலைமை எழுத்தராகச் சேர்ந்து பணி புரிந்தார்.
5. நேதாஜி வழிநடத்திய INA இவரால் நிறுவப்பட்டது.
6. இவரை எப்படியாவது கைது செய்துவிடவேண்டும் என்று நினைத்த ஆங்கிலேய அரசாங்கத்தினால் கடைசிவரை இவரின் நிழலைக் கூட அணுக முடியவில்லை.
#rashbeharibose #சான்றோர்தினம்