சி.பி.ஐ., இயக்குநராக பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கர்நாடக டி.ஜி.பி.,யாக இருக்கும் அவர், 2 ஆண்டுகள் புதிய பதவியில் நீடிப்பார். சி.பி.ஐ., இயக்குநரின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். மத்திய அரசு விரும்பினால், 5 ஆண்டுகள் அதனை நீட்டிக்க முடியும். சி.பி.ஐ., இயக்குநரை பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு முடிவு செய்யும். சி.பி.ஐ., இயக்குநர் சுபோத்குமாரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், இயக்குநர் குறித்து, இந்த குழு ஆலோசனை நடத்தியது. இதனை தொடர்ந்து, பிரவீன் சூட், சி.பி.ஐ., இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 2 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார்.