அனைத்து ராணுவ பயிற்சிகளிலும் முப்படைகள் கூட்டாக பங்கேற்பு

0
113

இந்தியாவின் முப்படைகளிலும் தரைப்படையில் 7, விமானப்படையில் 7 கடற்படையில் 3 என சுமார் 17 வெவ்வேறு வகையான கட்டளையகங்கள் உள்ளன அவற்றை அந்தந்த படைகளை சேர்ந்த மூன்று நட்சத்திர அந்தஸ்திலான அதிகாரிகள் வழிநடத்தி வருகின்றனர் இவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக CDS எனப்படும் கூட்டுபடை தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது. அவற்றின் கீழ் முப்படைகளின் அனைத்து தளவாடங்களும் வைக்கப்படும்.இதற்கான முதற்கட்டமாக மூப்படைகளும் தங்களது அதிகாரிகளை மற்ற படைகளில் பணியமர்த்தும் பணிகளை துவக்கி உள்ள நிலையில் இனி நடைபெற உள்ள அனைத்து ராணுவ பயிற்சிகளிலும் முப்படைகளும் இணைந்தே பங்கு பெறும் என்ற அறிவுப்பும் வெளியாகி உள்ளது.கூட்டு படைகள் தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுஹான் அறிவித்துள்ளார்.இதற்கான பணிகளை முப்படைகளையும் தொடர்பு கொண்டு அவரது கீழ் செயல்படும் ராணுவ விவகாரங்கள் துறை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சைபர் போர்முறை, விண் போர்முறை மற்றும் சிறப்பு படை கட்டளையகங்கள் இதற்கு உதவியாக இருக்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here