தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகளின் துணைவேந்தர்கள் மாநாடு, ஊட்டியில் இன்று(ஜூன் 05) நடைபெற்றது; மாநாட்டை கவர்னர் ரவி துவக்கி வைத்தார். உயர்கல்வியில் தமிழ் மொழியை அறிமுகம் செய்யும் வகையில், உயர்கல்விக்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பது தொடர்பாக, இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் தலைவர் ஜெகதீஷ்குமார், ஆன்லைன் வழியில் மாநாட்டில் பேச உள்ளார். மத்திய கல்வி அமைச்சகத்தின் பாரதிய பாஷா சமிதி தலைவர் சாமு கிருஷ்ணா சாஸ்திரி, லக்னோ பல்கலை துணைவேந்தர் அலோக்குமார் ராய், இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலை துணைவேந்தரும், யு.ஜி.சி.,யின் இந்திய மொழிகளில் பாட புத்தகம் தயாரிக்கும் குழுவின் தலைவருமான நாகேஸ்வர ராவ். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் மொழிபெயர்ப்பு பிரிவு அதிகாரி புத்தா சந்திரசேகர் ஆகியோர், துணைவேந்தர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.