தமிழகம் – கேரளாவுக்கு இடையேயான, கோவை மாவட்ட எல்லையில் வருவாய்த்துறை, கனிம வளத்துறை, வட்டார போக்குவரத்து துறை மற்றும் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து ஆய்வு நடத்துகின்றனர்.கனிம வளம் கடத்திச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. ஒரே ஒரு அனுமதிச்சீட்டை வைத்துக் கொண்டு, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில், கனிம வளம் எடுத்துச் செல்லப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட எடையை விட, கூடுதல் பாரம் கொண்டு செல்லப்படுகிறது.முறைகேடாக, விதிமுறையை மீறி கனிம வளங்களை எடுத்துச் செல்ல அனுமதித்து விட்டு, குவாரிகளை அளவீடு செய்வதாகவும், அபராதம் விதிப்பதாகவும், கனிம வளத்துறையினர் நாடகமாடுகின்றனர்.மக்கள் ஆவேசம் படுகின்றனர்.