ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் : இந்திவை நிரந்தர உறுப்பினராக ஆக்க ராஜ்நாத் சிங் கோரிக்கை

0
84

ராணுவம் சார்பில் நடந்த ஐ.நா சபை குறித்த கருத்தரங்கில், ராஜ்நாத் சிங் பேசியது: ஐ.நா.சபையில் உலகின் மக்கள்தொகை உண்மைகளை அதிகம் எடுத்துரைக்க வேண்டும். அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம் பெறாதபோது, அது ஐ.நா.வின் தார்மீக சட்டப்பூர்வமான தன்மையைக் குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது. எனவே ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவை நிரந்தர உறுப்பினராக ஆக்க வேண்டும்.ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே, மற்ற நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும் அதே வேளையில், ஐ.நா.,வுக்கான நாட்டின் பொறுப்பு குறித்து உறுதிப்படுத்தினார். ஐ.நா சபையின் அமைதி காக்கும் பணிகளில் இந்தியா மிகப்பெரிய பங்களிப்பை அளித்து வருகிறது. குறிப்பிட்ட பிராந்தியங்களில் ஏற்படும் மோதல்கள் முழு உலகத்தையும் பாதிக்கும் வகையில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நாம் கடந்த காலத்தை நினைவுகூரும் அதே வேளையில், எதிர்காலத்தை நோக்கியும் பார்க்க வேண்டும். கவுன்சில் தற்போது ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here