இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார நிபுணரும், அந்த நாட்டில் வௌியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் தலைமை பொருளாதார வர்ணனையாளருமான மார்ட்டின் வுல்ப், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து பைனான்சியல் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீத ஜிடிபி வளர்ச்சியைத் தக்க வைத்து கொள்ளும் என்று நான் கருதுகிறேன். நாட்டின் வங்கி இருப்புநிலைக் குறிப்புகள் சரிசெய்யப்பட்டுவிட்டன.கடன் எந்திரம் நல்ல நிலையில் உள்ளது. நாட்டின் மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டும் வரவிருக்கும் ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா வளர்ந்து வரும் பெரும் சக்தியாக இருக்க வாய்ப்புள்ளது.2050-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம், அமெரிக்காவின் அளவுக்கு நிகராக இருக்கும்.
Home Breaking News 2050-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு நிகராக இருக்கும் – பொருளாதார நிபுணர் மார்ட்டின் வுல்ப்