சத்ரபதி சிவாஜியின் புலி நகம் திரும்பி வருகிறது

0
1360

பெருத்த உருவமும், கொலை செய்யும் கொடூரத் திட்டத்துடன் சத்ரபதி சிவாஜியை சந்திக்க வந்த அஃப்சல் கானின் கதையை முடித்த புலி நகம் இது.

1659 ஆம் வருடம் பீஜாபூர் சுல்தானின் தளபதி அஃப்சல் கானை இப்புலி நகத் தைப் பயன்படுத்தியே அவனின் வஞ்சக சதியை முறியடித்து வெற்றி கொண்டார்.

இப்புலி நகம் தற்போது லண்டன் விக்டோரியா & ஆல்பர்ட் அருங்காட்சியகத் தில் இருக்கிறது.

இங்கிலாந்து இப்புலி நகத்தை பாரதத்தி டம் திருப்பித் தருவதற்கு முன் வந்துள்ளது.

மகாராஷ்டிர கலாச்சார அமைச்சர் சுதிர் முங்கன் திவார் (Sudhir Mungantiwar) லண்டன் சென்று அருங்காட்சியக நிர்வாகத்தினருடன் புரிந்துணரவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு மீண்டும் புலி நகத்தை தாயகம் எடுத்துவர உள்ளார்.

மாவீரர் சத்ரபதி சிவாஜி கொடுங் கோலன் அப்சல்கானின் கதையை முடித்த வெற்றித் திருநாளன்று அப்புலி நகத்தை பாரதத் திற்கு மீண்டும் எடுத்து வரக்கூடும் என்று தெரிகிறது.

பாரதத்தின் பெருமைகளை மீட்டெடுப் போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here