எம்.எஸ் சுவாமிநாதன்

0
202

எம்.எஸ் சுவாமிநாதன் இன்று இந்திய தேசம் உலகுக்கே தானிய ஏற்றுமதி செய்கின்றது, இந்தியர் எல்லோருக்கும் உணவு பாதுகாப்பு உறுதி செய்யபட்டிருக்கின்றது

தேசம் முழுக்க வீடுகளிலும் உணவங்களிலும் உணவு கொட்டி கிடக்கின்றது, மக்கள் விரயம் செய்யும் உணவு பொருளே அதிகம் என்கின்றது ஆய்வு, அந்த அளவு உணவு செல்வம் இன்று எல்லோருக்கும் எளிதாக வாய்த்து மக்களை நிறைவடைய செய்திருக்கின்றது

ஆனால் 1950ம் ஆண்டுகள் அப்படி அல்ல, அவ்வளவு ஏன் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த 1890களில் நிலமை எப்படி இருந்தது என்பதை அவரே தன் உரையில் சொல்கின்றார்

“இந்த நாட்டை சுற்றிபார்க்க கிளம்பி நான் சந்தித்த முதல் அனுபவம் வறுமை, திரும்பும் திசையெல்லாம் வறுமையும் பஞ்சமுமே இருந்தது, பரந்துவிரிந்த நதிகள், வற்றா ஆறுகள் செழிப்பான மண் என எல்லாம் இருந்தும் பஞ்சம் இங்கே எப்படி வந்தது என்பதெல்லாம் ஆட்சியின் சீரழவு

காசியிலே அன்னபூரணி திரும்பும் இடமெல்லாம் அன்னசாலையோடு ஆலயம் என உணவிட்டு மகிழ்ந்த தேசம் இப்படி சீரழிந்தது

குருநாணக்கும் தமிழக வள்ளலாரும் பிறந்த தேசம் இப்படி பஞ்சத்தில் வாடியது, அந்த கொடுமையினை கண்களில் ரத்தம் வராமல் சொல்லமுடியாது

நான் எப்படியான பஞ்சத்தை கண்டேன் என்றால் மக்களின் எலும்புகளில்தான் உயிர் ஒட்டிகொண்டிருந்தது, அவர்களுக்கும் என்னை போன்றவர்களுக்கு உணவளிக்க ஆசைதான் ஆனால் அவர்களிடமும் எதுவுமில்லை

மாபெரும் வாழ்வு வாழ்ந்த இனம், கோவிலெல்லாம் உணவு வீதியெல்லாம் தானம், கொண்டாட்டம் என்றால் தானம், திதி என்றால் அன்னதானம் என வாழ்ந்த இந்த இந்துசமூகம் ஒரு சப்பாத்திக்கு வழியின்றி போனது

எனக்கு எப்போவாது கிடைக்கும் சப்பாத்தியினை என் துணியில் முடிந்து கொள்வேன், அது கட்டியாக வறண்டு போய்விடும் , மிக மிக பசித்தால் அதை நீரில் கரைத்து குடித்துகொள்வேன்”

இந்தியா எப்படியான பஞ்சத்தில் இருந்தது என்பதை இதைவிட சொல்லமுடியாது, பிரிட்டிசார் ஆட்சியில் இந்திய தானியங்கள் இப்படி அள்ளி செல்லபட்டு செயற்கை பஞ்சம் உருவானது, விவசாயம் தோற்றது இன்றல்ல நேற்றல்ல, பிரிட்டிஷ் ஆட்சியிலே அதாவது இந்திய விவசாயம் எப்படியும் சீரழியட்டும் நமக்கு தேவை பணம், கிடைத்தவரை லாபம் என அவர்கள் 1756 முதல் சுரண்டியதிலேதான் இந்த பஞ்சம் வந்தது

ராபர்ட் கிளைவ் காலம் தொடங்கி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியா வரும் காலத்தில் இது உச்சத்தில் இருந்தது, மக்கள் பஞ்சத்தில் வாட ஜார்மன்னனுக்கு வரவேற்பா அதுவும் கோடிபணம் கட்டி வரவேற்பா என்றுதான் வாஞ்சிநாதனெல்லாம் பொங்கினான்

அப்படி இருந்தது வறுமை , கொடிய வறுமை

பிரிட்டிஷ்காரன் கல்விதந்தான், சாலை தந்தான் என்பவர்கள் இந்த கொடிய வறுமையினை தந்தான் என்பதை மறைப்பார்கள்,அவ்வளவு கொடிய பஞ்சமாய் இருந்தது

உலகபோர்கள் பெரிதாய் வெடித்தன அது இன்னும் பஞ்சத்தை தீவிரமாக்கின்று, அன்று போர்வீரர்களின் பெரும் தேவைக்காக இந்தியாவின் உணவுகள் அபரிமிதமாக கொண்டு செல்லபட இன்னும் மோசமாயிற்று

1940களில் இனி இந்தியா நமக்கல்ல என்பதை உணர்ந்த பிரிட்டிஷாரின் தீவிர கொள்ளைகள் நிலமையினை மோசமாக்கின‌

1947ல் பாகிஸ்தானை இழந்தபோது இந்தியா மிக முக்கிய விளைநிலமான சிந்து தீரம், பஞ்சாப் பகுதிகளை இழந்தது, கிழக்கே பாகிஸ்தானிடம் பிரம்மபுத்திரா தீரம் கங்கையின் பல பாகங்கள் இழக்கபட்டன‌

இனி இந்தியாவின் பெரும் சிக்கல் உணவு என ஆருடங்கள் வந்தன, இந்தியா அமெரிக்காவிடம் கைஏந்துமா சோவியத்திடமா என்றெல்லாம் செய்திகள் வந்தன‌

சுதந்திர இந்தியா இந்த தரித்திரத்தில்தான் பிற்ந்தது, பிடி அரிசிக்கு படி கோதுமைக்கு வழியில்லை

எல்லா நதியும் உண்டு, எல்லா நிலமும் உண்டு ஆனால் விளைவிக்க வழியில்லை விதை நெல்லும் இல்லை எனும் அளவில் பஞ்சம் தாண்டவமாடியது

நேருமேல் ஆயிரம் சர்ச்சை சொன்னாலும் இந்த பஞ்சத்தை போக்க அவர் நடவடிக்கை எடுத்தார் அல்லது காலம் அவ்வளவு மோசமாய் இருந்தது

அரசிடம் திட்டம் இருந்ததே தவிர இந்த 45 கோடி மக்களுக்கும் எப்படி உணவளிப்பது, எப்படி விளைவிப்பது என தெரியவில்லை

சொன்னால் பலர் நம்பமாட்டார்கள் ஆனால் அது நிஜம், அன்று பாசுமதி அரிசியின் விதை நெல் கூட பாகிஸ்தானிடம் சிக்கிவிவிட்டது அவர்கள் தர மறுத்தார்கள்

இந்தியாவின் அவசர தேவை குறுகிய காலத்தில் இருக்கும் விளைநிலங்களில் அபரிமிதமான விளைச்சலை காட்டுவது, அது இல்ல்லையே பாசன பரப்பை மும்மடங்காக்கி பெரிதாக விளைவிக்க வேண்டும் அதற்கு அவகாசமில்லை

தேசம் பஞ்சம் எனூம் எரிமலைமேல் அமர்ந்திருந்தது

அப்போதுதான் அவர் கண்டெடுக்கபட்டார் , அந்த இளைஞர் ஒரு வேளான் விஞ்ஞானியாக இருந்தார்

தமிழகம் குடந்தையில் காவேரி கரையில் பிறந்த அவர் வேளான் படிப்புகளை முடித்து 30 வயதுகளில் இருந்தார், அவரிடம்தான் தேசத்தின் பஞ்சத்தை விரட்டும் திட்டம் கொடுக்கபட்டது

அவர் பெயர் மான்கொம்பு சாமபசிவம் சுவாமிநாதன், சுருக்கமாக எம்.எஸ் சுவாமிநாதன்

அவர் மிகபெரிய அறிவாளி, 1950களில் உலகில் எல்லா அறிவாளுகளும் இங்கே வாருங்கள் என அமெரிக்கா அழைத்த காலங்களிலே அங்கு கற்க சென்றவர், பெரும் எதிர்காலம் அங்கே இருந்தது ஆனால் 1954ல் இந்திய அரசாங்கம் அழைப்பின் பேரில் வந்தார்

அவரிடம்தான் இந்த நாட்டின் பஞ்சத்தை போக்கும் பொறுப்பு ஒப்படைக்கபட்டது

அவர்தான் தன் ஆய்வுகளால் இந்திய உணவுவிளைச்சலை பெருக்கினார், சிறிய நிலத்தில் பெரும் விளைச்சலை பெறுவது எப்படி என காட்டினார், மெல்ல மெல்ல தேசம் எழுந்தது

காமராஜர் போன்றவர்கள் பெரும் அணைகட்டினார்கள், வடக்கேயும் பக்ரா நங்கல் போன்றவை வந்தன, அன்று காங்கிரஸில் இந்த் துவேஷம், பாகிஸ்தான் அபிமானம், பிரிட்டிஷ் பாசம் எல்லாம் இருந்தது ஆனால் அன்று ஊழல் கொஞ்சம் குறைவு அல்லது வழியில்லை

இதனால் பலமான அணைகள் எழும்பின அங்கெல்லாம் விளைச்சலை பெருக்கி காட்டினார் சுவாமிநாதன்

அது நல்லதா கெட்டதா, ரசாயண உரம் விஞ்ஞான விளைச்சலால் என்ன ஆனது என்றெல்லாம் தெரியாது ஆனால் 45 கோடி மக்கள் 80 கோடியாகும் போது அதனால்தான் நாம் வயிறாற உண்ண முடிந்தது

இந்தியா சிக்கலான நாடு வளமான நதிகள் அதிகம் அதே நேரம் வறண்ட பிரதேசமும் அதிகம் பசியாலும் பஞ்சத்தாலும் இந்தியா உடைந்து சிதறும் எனும் அந்த கணிப்பை எம்.எஸ் சுவாமிநாதனே பொய்யாக்கினார்

1955 முதல் 1990 வரையான காலகட்டங்களில் நாம் ஒரு தலைமுறைக்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால் அன்று வயல்களிலும் வரப்பிலும் உழைத்து பசிபோக்கிய அந்த மக்களுக்கு சொல்லவேண்டும்

பஞ்சாபிய சிங்முதல் கன்னியாகுமரி பக்கம் பாடுபட்ட வாழை விவசாயி வரை நன்றிகுரியவர்கள்

எம்.எஸ் சுவாமிநாதனின் அபார உழைப்பு தேசத்தை தாங்கியது , இன்றைய ஆப்ரிக்கா போல ஆப்கானிஸ்தான் போல மிக மோசமாக சென்றிருக்க வேண்டிய நாடு “பசுமை புரட்சி” என தன்னிறைவடைந்தது

இந்தியா அரிசிக்கும் கோதுமைக்கும் அடித்து சாக வேண்டும், அது இறக்குமதியினை நம்பி நாசமாக போகவேண்டும் அரிசி கோதுமைவியாபாரமெல்லாம் கப்பல் போக்குவரத்தெல்லாம் நம்மிடம் இருப்பதால் இந்தியா தங்கள் மறைமுக அடிமையாக இருக்கவேண்டும் எனும் சதியினை அவர்தான் முறியடித்தார்

அவரால் நாம் நிறைவுற்றோம், அவரால் எழுந்தோம்

வீரிய ரக நெல் வகைகள், வகை வகையான உரங்கள் என விளைச்சலை பெருக்கி காட்டினார் அவர்

இன்று நாமெல்லாம் வயிறார உண்கின்றோம், காண்மிடமெல்லாம் பிரியாணி கடைகளில் பாசுமதி சிரிக்கின்றது, தெருவெல்லாம் உணவகம் நிறைந்திருக்கின்றது, விருந்துகள் கொட்டாட்டங்கள் களைகட்டுகின்றன‌

வகை வகையாய் உண்ண உணவகமும் அதை சொல்லித யூடியூப் சேனல்களும் பெருகிவிட்டன, உணவு இன்று இந்தியருக்கு சிக்கலே அல்ல‌

நியாயவிலை கடைகள் முதல் பல இடங்களில் அவை குறைந்த விலைக்கு கிடைக்கின்றன‌

ஆனால் அன்று அப்படி அல்ல, ஒரு பிடி அரிசி கனவாய் இருந்தது, தென்னகத்தார் சப்பாத்திக்கு வழக்கமில்லாதவர்கள் ஆனால் வறுமை அவர்களை அப்படி உண்ண வைத்து பழக்கிற்று

எப்படியான வறுமை எல்லாம் கண்டோம்?

பஞ்சத்தில் எறும்பு புற்றை இடித்து எறும்புகள் சேமித்த தானியத்தை மண்ணோடு அள்ளி அலசி உண்ணுமளவு வறுமை 1940களில் இருந்தது

இன்று 135 கோடி மக்கள் உணவில் மிதக்கின்றார்கள், திகட்ட திகட்ட உண்கின்றார்கள், உணவுக்காக இன்னொரு நாட்டிடம் கையேந்தாமல் நாமே உலகெல்லாம் ஏற்றுமதி செய்கின்றோம்

சுதந்திர இந்தியாவின் மாபெரும் சாதனை இது

இத்னை செய்தவர் அந்த சுவாமிநாதன்

மொத்த தேசத்துக்கும் உணவிட்ட புண்ணியத்துக்காக இன்று 98 வயதில் நம்மோடுதான் இருக்கின்றார், சோற்றில் கைவைக்கும் முன் ஒவ்வொரு இந்தியனும் அவர் இருக்கும் திசை நோக்கி தொழல் நன்றியுடமை

இன்று அவர் மறைந்துவிட்டார்

பெரும்படிப்பு மாபெரும் எதிர்காலம் அமெரிக்காவில் இருந்தும் பிறந்த நாட்டின் பசிக்காய் வந்து உழைத்து இன்று இத்தேசத்தை மணிமேகலையின் அட்சய பாத்திரமாய், பாஞ்சாலி கையில் இருந்த பாத்திரமாய் மாற்றி தந்தவர் அவர்தான்

அவராலே இன்று உணவுபற்றிய கவலை இன்றி அரிசி கோதுமையெல்லாம் சல்லிவிலையில் வாங்கி உண்டு நிம்மதியாய் தேசம் இயங்குகின்றது

அந்த அன்னபூரணியின் மகன், அட்சய பாத்திரம் தந்த அந்த தேவன் இனி இல்லை

ஒரு தேசத்தின் அடிப்படை விஷயம் உணவு, உணவில் தன்னிறைவு அடையா தேசம் உருப்படாது, இன்று அமெரிக்காவோ ரஷ்யாவோ சீனாவோ வலுத்து நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் உணவு பாதுகாப்பு அப்படி

இந்தியா அப்படி உலகின் ஐந்தாம் பொருளாதார இடத்தில் இருக்க இந்த உணவுதான் அடிப்படை இல்லையேல் உலகம் பிச்சைக்கார கோலத்தில் நம்மை நிறுத்தி வைத்திருக்கும்

“வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்” எனும் பாரதியின் கனவை அவர்தான் நிறைவேற்றியவர் அவர்தான்

அதைத்தான் வரலாறு சொல்கின்றது

பிராமண ஆதிக்கம், சுரண்டல் என்பதெல்லாம் சரியல்ல , தேசத்தின் எல்லா மக்களும் வயிறார உண்ண வேண்டும் என தன் உழைப்பையெல்லாம் கொட்டி உணவிட்ட அவரும் ஒரு பிராமணர்தான், தன் படிப்பை கொண்டு தேசம் முழுக்க உணவிட்டவரும் பிராமணர்தான்

அவ்வையார் ஒரு முக்கால தீர்க்கதிர்சி, அவர் “சோழநாடு சோறுடைத்து” என்றாள், அந்த காவேரிகரை எல்லா மக்களும் வாழ வழிசெய்யும் பண்புடைய நாடு என்றாள்

அந்த வார்த்தை எம்.எஸ் சுவாமிநாதன் வாழ்விலும் பலித்திருக்கின்றது

தேசத்துக்கே உணவிட வழிசெய்த அந்த மாமனிதனை காலமுள்ள காலமளவும் இத்தேசம் நினைவில் கொண்டிருக்கும்

கங்கையும் காவேரியும் அவர‌ன்றி வேறல்ல..

சீனாவின் டெங் சியோ பிங் இறந்தபோதும், சிங்கப்பூரின் லீ குவான் யூ இறந்தபோதும் அம்மக்கள் வேலை செய்து கொண்டே அஞ்சலி செலுத்தினார்கள், உழைக்க வழி செய்த தலைவர்களுக்கு அவர்கள் செய்த அஞ்சலி அது

இந்தியர்கள் தங்களுக்கு வயிறார உண்ண வழிசெய்த அந்த மகானுக்கு தங்கள் கையில் அரிசி கோதுமை தொட்டபடி அஞ்சலி செலுத்துகின்றார்கள்

இறந்தவர் வாயில் அரிசி போடுவது இந்து தர்மம், நாட்டுக்கே அரிசி தந்த அந்த நல்லவருக்கு வாய்க்கரிசி இட்டு,அவர் தந்த அரிசியினை அவருக்கே ஒரு பிடி கொடுத்து அனுப்புகின்றது தேசம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here