அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற வெளிநாடுகளுடனான உறவு குறித்து கவுன்சில் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியது: கனடா குற்றச்சாட்டில் அது இந்திய அரசின் கொள்கையல்ல. காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் முக்கிய தகவல்களை கனடா பகிர்ந்தால் அதை விசாரிக்க தயார்.
பயங்கரவாதம், தீவிரவாதம் உள்ளிட்டவை தொடர்பாக தொடர்ந்து பிரச்னை நிலவி வருகிறது. கனடாவில் இந்திய நாட்டு தூதரக அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தியா- ரஷ்யா நட்புறவு நிலையானது. ரஷ்யாவின் கவனம் ஆசிய நாடுகள் பக்கம் திரும்பி உள்ளது. உக்ரைன் போரால் ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகளுடன் இருந்த உறவு முறிந்து விட்டது என்று பேசினார்.