சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய ‘லெவன்’ அணியில் உடற்தகுதி பெறாத சுப்மன் இடம்பெறவில்லை. சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடன் சேர்த்து ஜடேஜா, குல்தீப் என மூன்று ‘சுழல்’ வீரர்கள் இடம்பெற்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு 200 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 200 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு அடுத்து களமிறங்கிய இந்திய அணி, துவக்கத்தில் இஷான் கிஷன், ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் மூவரும் ரன் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். அடுத்து களமிறங்கிய கே.எல். ராகுல் ஆட்டம் இழக்காமல் (97) மற்றும் விராத் கோஹ்லி(85) நிதானமாக விளையாடி அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர். இறுதியில் இந்திய அணி, 41.2ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.