கடந்த இரண்டு நாட்களாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுக்கள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் இருந்து 27 பேர் இஸ்ரேல் சென்றிருந்தனர். பாலஸ்தீனம் பகுதியில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக எகிப்து வந்தடைந்தனர். மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியாவின் தூதரகம் முயற்சியால் இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர்.