”ஜம்மு, காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப் படுத்தப்பட்டுள்ளது’ என, சி.ஆர்.பி.எப்., தலைமை இயக்குனர் சுஜய் லால் தாசோன் கூறினார். கோவை மாவட்டம், துடியலுார் கதிர்நாயக்கன்பாளையத்தில் சி.ஆர்.பி.எப்.-, பயிற்சி கல்லுாரியில் கட்டமைக்கப்பட்ட துப்பாக்கி சுடும் தளத்தை சி.ஆர்.பி.எப்., – டி.ஜி., சுஜய் லால் தாசோன் நேற்று திறந்து வைத்தார். அவர் பேசுகையில் :- பயங்கரவாதிகள் பதுங்கும் இடங்களை கண்டறிய ‘ட்ரோன்’ உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள், சி.ஆர்.பி.எப்.,ல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், அந்தந்த மாநில போலீஸ் மற்றும் பிற பாதுகாப்பு படைகளுடன் சி.ஆர்.பி.எப்., இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளது. என்று தெரிவித்தார்.
Home Breaking News காஷ்மீரில் பயங்கரவாதிகளை சிறப்பாக எதிர்கொள்கிறது – சி.ஆர்.பி.எப்., தலைமை இயக்குனர்