புதுடில்லியில் நேற்று நடந்த இந்தோ – பசிபிக் பிராந்திய கருத்தரங்கில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது : ”வரும் 2027ம் ஆண்டுக்குள், வளர்ந்த பொருளாதார நாட்டை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் ,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வழக்கமான மதிப்பீடுகளின்படி கூட, 2027ம் ஆண்டில், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக, நம் நாடு உருவெடுக்கும். 2047ம் ஆண்டுக்குள், வளர்ந்த பொருளாதாரமாக மாற இந்தியா விரும்புகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதத்தை, நாட்டின் கடல் சார்ந்த பொருளாதாரம் வைத்துள்ளது. சர்வதேச ஏற்றுமதியை பொறுத்தவரை, உலகளவில், 2014ல் 44வது இடத்தில் இருந்த இந்தியா, 2023ல், 22வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. இந்தியா – -மத்திய கிழக்கு – -ஐரோப்பா இணைப்பு வழித்தடம், மிகவும் நம்பிக்கைக்குரிய இணைப்பு திட்டங்களில் ஒன்று.
போக்குவரத்துத் திறனை மேம்படுத்துவது, தளவாட செலவுகளை குறைப்பது, பொருளாதார ஒற்றுமையை அதிகரிப்பதுஇதன் நோக்கம். இத்திட்டத்தை செயல்படுத்துவதில், இஸ்ரேல் – ஹமாஸ் போர் போன்ற புவிசார் அரசியல் சவால்களாக உள்ளன.