வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார்

0
276

வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் நவம்பர் 17, 1870 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில், அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் பிறந்த, ஒரு தமிழறிஞர். கரந்தை வடவாற்றங்கரையில் அமைந்திருந்த பஞ்சநத பாவா மடத்தில் தொடங்கப்பட்ட வித்தியா நிகேதனம் தமிழ் சங்கத்திற்கு தலைவராக இருந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்கு தனது முழு ஆதரவை அளித்து, சங்கத்தின் ஆண்டுவிழாவை தஞ்சையில் நடத்திவைத்தவரில் ஒருவர். இராசாளியார் வீட்டில் மிகவும் பழமையான புறநானூற்று ஏடு ஒன்று இருந்ததை, கிருஷ்ணசாமி சேனைநாட்டார் வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர், திருச்சி பகுதி கள்ளர்களை குற்றப் பரம்பரையில் இருந்து மீட்டார். அரித்துவாரமங்கலத்தில் இராசாளியார் பள்ளிக்கூடம் ஒன்றையும் நூலகம் ஒன்றையும் நிறுவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here