மேற்காசிய நாடான ஈரானில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில், ”ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ”இதன் ஒரு பகுதியாக, இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் ஈரான் வர விசா தேவையில்லை என, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுஉள்ளது,” என்றார்.