உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்து உள்ளது. இதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்தது. குறைக்கப்பட்ட தண்டனை விபரம் இன்னும் வெளியாகவில்லை. இது மத்திய அரசு மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.