மாலத்தீவு அதிபர் எம் முய்ஸு கடந்த பல ஆண்டுகளாகவே சீன, பாகிஸ்தான் நிதியைக் கொண்டு இந்தியாவை வெளியேற்றுவோம் ப்ரசாரம் செய்துவந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி சமீபத்தில் லட்சத்தீவு சென்றார். அங்கு கொச்சிக்கும் லட்சத்தீவுக்கும் இடையே ஆழ்கடலில், ‘ஆப்டிக்கல் பைபர் கேபிள்’ பதிக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். பின்னர் லட்சத்தீவு வளர்ச்சிக்கான கட்டமைப்பு திட்டங்களையும் துவக்கினார். பிறகு ஆழ்கடலில் நீச்சல் அடித்தும், கடற்கரையில் நடைபயிற்சி சென்றும் லட்சத்தீவின் அழகை ரசித்தார் மோடி. அந்த படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ‘சாகச சுற்றுலா விரும்புவோருக்கான இடம் இது’ என்று வர்ணித்தார். இணையத்தில் மோடியை பல கோடி பேர் பின்பற்றுவதால், லட்சத்தீவுக்கு விளம்பரம் கிடைத்தது. இதையடுத்து மோடி எதிர்பாளர்கள் நாடெங்கிலும் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்லாதீர்கள் என்ற ப்ரசாரம் காட்டுத்தீயெனப் பரவி விட்டது. இந்நிலையில் பிரதமர் மோதியை அவதூறு செய்து கீழ்த்தரமாக விமர்சனம் செய்த மரியம் ஷியுன, மால்ஷா, ஹஸன் ஸிகன் மூன்று அமைச்சர்களின் கேலியும் கிண்டலும் இந்தியாவில் மக்களின் கோபத்தை கிளறியது. பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல டிக்கெட்டும் ஓட்டல் ரூம்களும் பதிவு செய்திருந்த இந்தியர்களில் பலரும் பயணத்தை ரத்து செய்தனர். இந்தநிலையில் தனிநபர்கள் வெளியிட்ட பதிவுகளுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை. இந்த கருத்துக்களை அரசு ஏற்கவில்லை” என்று கூறியது. சற்று நேரத்தில், இந்த பிரச்னையில் சம்பந்தப்பட்ட மூன்று அமைச்சர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். என அறிவிப்பு வெளியாகியுள்ளது.