பால் தாக்கரே என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே 23, ஜனவரி 1926 ல் பிறந்தார். சிவசேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர்.சமூக சேவகர் மற்றும் எழுத்தாளராக விளங்கினார். அவர் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகப் பணியாற்றி (ஒன்றிணைந்த மஹாராஷ்டிரா இயக்கம் என்று பொருள் தரும்) சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால் என்னும் இயக்கத்தின் மூலம் 1950 ஆம் ஆண்டுகளில் மராத்திய மொழி பேசும் மாநிலமாக மஹாராஷ்டிரா உருவாவதிலும், அதன் தலைநகராக மும்பை அமைவதிலும் முக்கியப் பங்காற்றினார். தொழில் வாழ்க்கையை மும்பையில் 1950 ஆம் ஆண்டுகளில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்னும் ஒரு பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராகத் துவங்கினார். அவரது கேலிச் சித்திரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஞாயிறு பதிப்புகளிலும் வெளியாயின. வேறு மாநிலங்களிலிருந்து மும்பை நகரில் குடியேறுபவர்கள், இந்து-அல்லாதவர்கள் (குறிப்பாக இசுலாமியர்கள்) மற்றும் வங்காள தேசம் நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறும் இசுலாமியர்கள் ஆகியோரை எதிர்ப்பதில் தாக்கரே மிகவும் வெளிப்படையாகவும், அதிரடியாகவும் செயல்பட்டு வந்தார். இந்தியாவை “இந்து ராஜ்யம்” (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், “நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
#balthackeray #சான்றோர்தின